இது தான் பெரிய படிப்பு.மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்துக் கொள்ளும் ஆர்வம் முன்பு எப்பொழுதும் இருந்ததை விட இப்போது இளைஞர்களிடையே அதிகரித்துவிட்டது.

இப்படியும் ஒரு தலைவரா? அதுவும் நாம் வாழும் இந்த மண்ணில் வாழ்ந்தாரா?! கேள்வி எங்கும் எதிரொலிக்கத்தான் செய்கிறது. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவர் போல் வாழ்க்கை மேற்கொள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும். அவரிடம் பயிற்சி பெறச் செல்வோர் எத்தனை அறிஞராக.., எத்தனைப் பெரிய செல்வந்தராக இருந்தாலும் காந்தி அவர்களுக்கு உடல் உழைப்பு தொடர்பான வேலைகளில் எதாவது ஒன்றைக் கொடுத்து “இது தான் பெரிய படிப்பு” என்பார்.

அவர் தாம் நிறுவிய ஆசிரமத்திற்கு என்ன பெயர் வைத்தார் தெரியுமா? ”உத்தியோக மந்திரம்” ஆதாவது தமிழில் அழைப்பதானால் “ தொழிற்கோவில்”என்பதாகும்.

அங்கே எத்தகைய பெரிய மனிதர் வந்தாலும் எதாவது ஒரு தொழிலைச் செய்தே ஆக வேண்டும்.

அந்த நாளில் பிரபல பொருளாதார வல்லுநராக விளங்கிய ஸ்ரீமந் நாராயணன் என்பவர் காந்தியடிகளைக் காணச் சென்ற போது, அடிகள் அவரிடம் ஒரு துடைப்பத்தைத் தந்து துப்புரவுப் பணியைப் பார்க்கச் சொன்னார்.

போராசிரியர் கிருபாளனியை அடுப்பங்கரையில் காய்கறியை நறுக்கச் சொன்னார். மேலும் அவருடைய ஆசிரமத்தில் உணவு வேண்டுமாயின் வேலை செய்தாக வேண்டும் என கட்டாயம் இருந்தது.

உழைக்காதவர்களுக்கு ஆசிரமத்தில் உணவு மட்டுமல்ல: ஒரு வாய் தண்ணீர்க் கூட தரப்படமாட்டது.

இது குறித்து யாரேனும் காந்தியடிகளிடம் விளக்கம் கேட்டால் தேக பலம் வாய்ந்தவர்களுக்கு உணவோ, நீரோ ஆளிப்பது சோம்பலை வளர்ப்பதாகும். தண்ணீர் வேண்டுமானால் இரைத்து அருந்தட்டும். உணவு வேண்டுமானால் வேலை செய்யட்டும்.

 எல்லோரும் அன்றாட உணவுக்காக தினசரி சற்று உழைத்தால் வறுமை, துன்பம், கவலை, நோய் இவை மறைவதுடன்... ஏற்றத்தாழ்வும் இராது என்ற மகாத்மா உழைப்பின் பெருமையை உலகக்கு உரக்கச் சொன்னதோடு மட்டுமல்ல, பல வேளைகளில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு அதை முடித்த போதும்..., உணவருந்த மாட்டார். மூச்சுத் திணற, களைப்பு மேலிட நூல் நூற்ற பின்பே பசியாறுவர். இப்படியும் ஒரு தலைவரா? ஆம் அவர் தான் மகாத்மா காந்தி !

வரலாற்றில் அரிய நிகழ்வுகள்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.