மாபெரும் உண்மை.கி.மு 563இல் பிறந்து, இந்த உலகில் படர்ந்திருந்த அறியாமை எனும் இருளைக் கிழித்த செஞ்ஞாயிறு புத்தபிரான்.

அரச குலத்தில் அரண்மனை வாசத்தில் பிறந்த அவர் இளம் வயதிலேயே துறவு பூண்டு போதி மரத்தடியில்  ஞானம் பெற்றார்.

தாம் கண்டறிந்த உண்மைகளை ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு எடுத்துரைத்தார் .அதோடு நில்லாமல் தமது சீடர்களை நாடெங்கும் அனுப்பி தருமத்தை போதிக்கச் செய்தார். இதனால் அந்நாளில் மக்களிடைய நிலவி வந்த மூடபழக்க வழக்கங்கள் தகர்ந்தன. மனித குலம் புத்தபிரானின் போதனைகளைப் பின் தொடர்ந்த வேளையில் ...,

புத்தபிரானின் சீடர்களில் ஒருவருக்கு பெருத்தக்  கவலை உருவாயிற்று...,

கெளதம புத்தரிடம் சீடர் குருவே நமக்குப் பிறகு இந்த பௌத்த நெறி எப்படி வளரப் போகிறது? யார் அதற்கு வழிகாட்டப் போகிறார்கள்?” என்று கவலை நிறைந்த முகத்தோடு கேட்டார்.

அதற்கு அமைதியே வடிவான கௌதம புத்தர் புன்னகையோடு சொன்னார்.

நதிகளுக்கு யாராவது வழிகாட்டுவார்களா?

அது தன் பாதையை தானே அமைத்துக் கொண்டு எத்தனை தடைகள் வந்தாலும் அவைகளைத் தகர்த்து முன்னேறிப் பாய்வதில்லையா? அதைப் போலத்தான் பௌத்த நெறியும் என்றார் புத்தபிரான். பதில் கேட்டு சீடரின் மனம் பிரகாசித்தது .

புத்தர் தனது சீடர்களுடன் பயணம் மேற்கொண்டார்

அவர்கள் ஒர் ஏரியைக் கடக்கும் போது, ஒரு சீடரை அழைத்து எனக்குத் தாகமாக இருக்கிறது குடிக்கத் தண்ணீர்க் கொண்டுவா... என்றார்.

சீடரோ ஏரியின் நீர்பகுதிக்குச் சென்றார். அந்த நேரம் ஒரு மாட்டு வண்டி சென்றதால் தண்ணீர் கலங்கி சேறாக மாறி இருந்தது.

சீடர் நேரே புத்தரிடம் வந்து பகவானே நீர் கலங்கி

இருக்கிறது. அது குடிப்பதற்கு ஏற்றதல்ல என்று கூறினார்.   

புத்தர், சரி என்பது போல் தலையைசைத்து... அமைதியானார். பின்னர் அரைமணி நேரம் கழித்து அதே சீடரிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார். சீடர் மீண்டும் ஏரிக்குச் சென்றார். அப்பொழுது தண்ணீர்  தெளியாமலே இருந்தது எனவே அவர் முன்பு சொன்ன பதிலையே கூறினார்.

சற்று நேரம் கழிந்தது  அதே சீடரை மீண்டும் அழைத்து ஏரியில் சென்று  தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.

சீடரும் ஏரியை அடைந்தார். அப்போது அவருக்கு கண்ணில் பட்ட காட்சி வியப்பாக இருந்தது. தண்ணீர் தெளிந்திருந்தது.

சீடரும் மகிழ்ந்து சிறிய கலம் ஒன்றில் நீரை நிறைத்துக் கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தார்.

தெளிந்த அந்த நீரைப் பார்த்த புத்தர் சீடரை நோக்கி.., இத்தண்ணீர் தெளிய நீ என்ன முயற்சி செய்தாய்? நீ அத்தண்ணீரை அப்படியே விட்டு விட்டாய், அது போலத்தான் உன் மனமும், உன் மனம் கலக்கமுற்று இருக்கும் போது, அதனை அப்படியே விட்டுவிடு, அது தானாகவே தெளிவடைந்து விடும். அதனை அமைதிப்படுத்த நீ எந்த முயற்சியும் செய்யத் தேவையில்லை என்று உபதேசித்தார்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெளிந்த மனதைப் பெறுவது என்பது கடினமான காரியம் அல்ல, மாறாக, அது எளிதான காரியமே!

எவ்வித முயாற்சியும் இல்லாமல் நாம் இந்த அமைதியான மனதை எப்பொழுதும் பெற முடியும்” என்று தனது சீடருக்கு உணர்த்திய நிகழ்வு அரிய நிகழ்வு அல்லவா?


வரலாற்றில் அரிய நிகழ்வுகள். செந்தமிழ்த்தாசன்

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.