Latest Post       
ஒவ்வொரு மனிதரிடத்திலும் நான் ஆண்டவனைப் பார்க்கிறேன். மக்கள் சேவையே, மகேசன் சேவை, தொழுநோயாளிகளின் உடலைத்தொட்டு அவர்களின் காயங்களுக்கு மருந்து போட்டு பணிவிடை செய்வதை, நான் அந்த ஆண்டவனுக்கே பணிவிடை செய்வதாக உணர்கிறேன், என்ற மாபெரும் சேவைக்கு இலக்கணமாக விளங்கிய இந்தப் பெண்மணி தனது மகத்தான சேவைகளை மண்ணுலகில் துவங்கிய போது அவருக்கு வயது வெறும் 12 தான்.

இளம் வயதிலேயே இத்தனை அற்புதப் பண்பா? அப்பெண்ணின் ஆசிரியர் தீர்க்கமாகக் கூறினார், “என்றாவது ஒருநாள் துறவியாகி தியாக வாழ்க்கையில் பிரகாசித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பாய்” என்று ஆம்! ஆசிரியர் சொன்னது பலித்தது அந்தப் பெண்மணி சேவையால் உயர்ந்து, புனிதர் பட்டம் பெற்றார்.

இவர் யார்? அவர் தான் கருணை தேவதை என்று உலக மக்களால் போற்றப்படும் அன்னை தெரெசா. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் தன் பிள்ளைகளாய் பாவித்து சேவை செய்த அன்னை, யூகோஸ்லாவியா நாட்டின் ஸ்கோபி என்ற இடத்தில் 1910ஆம் ஆண்டில் ஆகஸ்டு 27இல் பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பெஜாவஹிபு என்பதாகும்.

அன்னை தெரரெசா 1928இல் இந்தியாவில் காலடி வைத்தார். 1937இல் அருட்சகோதரி ஆனார். 1950இல் மிஷினரிஷ் ஆப் சாரிட்டி என்னும் தொண்டு அமைப்பைத் தொடங்கிய இவருக்கு வாடிகன் நகரின் அனுமதி கிடைத்தது. இச்சபையில் 3000 கன்னியர் சேவைகளாற்ற இணைந்து, சுமார் 87 நாடுகளில் தங்களின் அளப்பரிய சேவைகளையாற்றினர்.

உலகில் எங்கெல்லாம் அபயக்குரல் கேட்கிறதோ, அங்கெல்லாம் கருணைக் கரத்தோடு அன்னை விரைந்தார்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் எத்தியோப்பியா, சூடான் போன்ற நாடுகளில் வாழும் மக்கள் உணவு பஞ்சத்தினால் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதை செவியுற்ற அன்னை என்பில் அதனை வெயில் போல துடித்தார். உடனே அவ்விடம் சென்று பசியால் வாடும் மக்களுக்கு உணவு, உடை வழங்கி இலட்சக்கணக்கானவர்களை மரணப்பிடியிலிருந்து மீட்டார். தினமும் 2 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட தொழுநோயாளிகளுக்கு 119 நிறுவனங்கள் மூலமாகவும், 745 நடமாடும் மருத்துவமனைகள் மூலமாகவும் சிகிச்சை அளித்தார். வயிற்றில் வளரும் குழந்தையை தயவு செய்து யாரும் கொள்ள வேண்டாம், அது பிறந்த பிறகு உங்களுக்குத் தேவையில்லை என்றால் என்னிடம் கொடுங்கள், நான் அக்குழந்தையை பத்திரமாக வளர்க்கிறேன் என்று, அன்புருவாய் மண்ணில் உலவிய அன்னை தெரேசா தாம் நிறுவிய குழந்தைகள் காப்பகத்திற்கு ‘சிசு பவன்’ என்று பெயர் சூட்டினார்.

அன்னையின் அன்புச்சொல் அதாவது அவர்தம் தத்துவம் எது தெரியுமா?
“இறைவன் செல்வத்தை யாருக்கெல்லாம் கொடுத்திருக்கின்றாரோ அவர்கள் தாமாக முன்வந்து இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்!” என்கிறார்.

இந்த உலகில் பரிவும், பாசமும், அமைதியும், சமாதானமும், கருணையும், மனிதநேயமும் தழைக்க வேண்டும் என்கிறார். இதுவே அவருடைய போதனையாக இருந்தது.

கல்கத்தா நகரில் அன்னை வாழ்ந்த போது, நாள்தோறும் காளிமாதாவுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர் ஒருவர் சாலையில் திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்தவரை அருகிலிருந்த எவரும் காப்பாற்ற முன்வரவில்லை. அவரவர் வேலை என்று போயினர், என்ன அதிசயம் இதை செவியுற்ற அன்னை அர்ச்சகரை தன் மடியில் ஏந்தி நீர் தெளித்து முதலுதவி புரிந்து காப்பாற்றினார். மயக்கம் தெளிந்து, நடந்ததை உணர்ந்த காளிமாதா ஆலயத்தின் அர்ச்சகர் அதிர்ச்சிக்குள்ளானார்.

தாயே... காளிமாதா! உனை எத்தனை ஆண்டுகாலம் பூஜித்து வணங்கியிருப்பேன். அப்போதெல்லாம் காட்சி தராத நீ இப்போது உன் மகனுக்குக் காட்சி தந்தாயம்மா என்று ஆனந்தக்கண்ணீர் வடித்தார்.
ஜாதி பற்றியோ, மதம் பற்றியோ கவலைப்படாமல் துயருற்று துடிக்கும் மக்களுக்கு அன்பைப் பொழிந்த அன்னையல்லவா...கருணை தேவதை தெரேசா.

1964ஆம் ஆண்டு போப்பாண்டவர் இந்தியா வந்த போது 35 இலட்ச ரூபாய் மதிப்பு வாய்ந்த தமது காரை அன்னை தெரெசாவுக்கு அன்பளிப்பாக வழங்கினார். அந்தக் காரில் ஒரு முறை கூட அன்னை தெரேசா பயணம் செய்யவில்லை. சாவியை வாங்கிய நிமிடங்களிலேயே அந்த காரை ஏலம் விடச் சொன்னார். ஏலத்தில் கிடைத்த பணத்தைக்கொண்டு தொழு நோயாளிகளை கவனிக்க இல்லம் ஒன்றைக் கட்டினார்.

கடமையைச் செய்; புகழ் மாலை உன் காலடியில் கிடக்கும். செல்வாக்கு நிழல் போல பின் தொடரும் என்பார்களே, அவருக்குக் கிடைத்த புகழாரங்களை பொருட்படுத்தவே இல்லை. தனக்கு உச்ச விருதான நோபல் பரிசு உலக சமாதானத்திற்காக 1979ஆம் ஆண்டு வழங்கப்பட்ட போது என்ன செய்தார் தெரியுமா?

நோபல் பரிசு வழங்கி முடித்த பின், பரிசுப் பெற்றவர்களை பாராட்டும் விதமாக மிக உயரிய விருந்து நிகழ்ச்சியொன்று நடைபெறுவது வழக்கம், அவ்வழக்கத்தை தனக்கு சாதகமாக மாற்ற வேண்டினார் அன்னை, அது தான் என்ன மாற்றம்?

அவருக்கு நோபல் பரிசு வழங்கிய நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு மிகப்பெரிய விருந்தளிக்கும் செலவை தன்னிடம் கொடுக்க வேண்டும் என்பது தான் அது. அந்த விருந்தின் செலவை தன்னிடம் கொடுத்தால், 400 ஏழைகளுக்கு ஒரு வருட சாப்பாட்டிற்கு வழி பிறக்கும் எனப் பரிசுக்கமிட்டியிடம் அவர் கேட்டுக் கொண்டார். கமிட்டியும் அன்னையின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது.

சொர்க்கத்தின் இனிய தேவதை கருணை என்பார். கருணை தேவதை அன்னை தெரரெசா இம்மண்ணிற் கிடைத்திட நாம் என்ன புண்ணியம் செய்தோமோ? கருணையும், இரக்கமும் பல்கிப் பெருகட்டும்! 

அரசியல் என்பது வேறொன்றும் இல்லை  மக்களுக்காக உழைப்பதுதான். 

பெருந்தலைவர் ,ஏழைப்பங்காளர் .காமராசரின் சிலைக்கு  எளியவன் [செந்தமிழ்த்தாசன்] மாலை  அணிவித்து  மரியாதையை செய்யும் பேறுபெற்றேன்.  இடம் ;கேளம்பாக்கம் .சென்னை .

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.